மும்பை தொழிலதிபரை மணக்கிறார் வரலட்சுமி சரத்குமார் 

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் - மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் இருவருக்கும் மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான அறிவிப்பையும், புகைப்படங்களையும் மணவீட்டார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

சரத்குமாரின் மகளான வரலட்சுமி, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘தாரை தப்பட்டை’, ‘விக்ரம் வேதா’, ‘சண்ட கோழி 2’, ‘சர்கார்’, ‘மாரி 2’, ‘இரவின் நிழல்’ படங்களின் மூலம் கவனம் பெற்றார். கடைசியாக தெலுங்கில் வெளியான ‘ஹனுமான்’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராயன்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர், மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ் என்பதை மணமுடிக்க உள்ளார். மும்பையில் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “வரலட்சுமி சரத்குமார் - நிகோலய் சச்தேவுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து, மார்ச் 1 மும்பையில் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றிகொண்டு நிச்சயம் செய்யப்பட்டது. திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்