சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் நடிகர்களை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர்கள் பட்டாளமே களமிறங்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுவரை வெளியான நடிகர்கள் பட்டியலின் படி, தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஐயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் ‘ராயன்’ படத்தில் நடித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனுஷின் 50-வது படமான இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வட சென்னையை களமாக கொண்ட இப்படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
ஃபாஸ்ட் ஃபுட் கடையில் அமைதியாக தனது சகோதரனுடன் வேலை பார்க்கும் ஒருவனுக்கான மறைக்கப்பட்ட ‘மாஸ்’ ஃப்ளாஷ் பேக்கை இப்படம் பேசுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. “உங்களை வைத்து படம் இயக்குவேன் என்று நினைத்துப்பார்க்கவில்லை” என செல்வராகவனை குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார் தனுஷ். அந்த வகையில் பெரும் பட்டாளத்தை இயக்கியிருக்கும் தனுஷின் இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
» “இறைச்சி... இன்று அடிப்படை உரிமைகளில் ஒன்று!” - வெற்றிமாறன்
» 10 நாட்களில் ரூ.50 கோடி: வசூலில் மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ மாஸ்!
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
34 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago