மும்பை: “ஒரு தோல்விக்குப் பிறகு எனக்கு நிறைய அன்பு கிடைத்ததாக உணர்ந்தேன். படம் சரியாக போகவில்லை என்பது எனக்கு எமோஷனலாக மிகவும் காயப்படுத்தியது” என ‘லால் சிங் சத்தா’ பட தோல்வி குறித்து ஆமிர்கான் மனம் திறந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “லால் சிங் சத்தா படத்தின் இயக்குநர் அத்வைத், கரீனா கபூர் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் கடுமையாக உழைத்தனர். ஆனால் படம் சரியாக போகவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னுடைய படம் சரியாக ஓடவில்லை என்பதை அறிந்து என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் என்னிடம் அக்கறையுடன் விசாரித்தனர். ஒரு தோல்விக்குப் பிறகு எனக்கு நிறைய அன்பு கிடைத்ததாக உணர்ந்தேன்.
இது ஒருபுறம் இருந்தாலும், சீரியஸான மற்றொரு பக்கம் நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்பதை உணர்த்தியது. அந்தத் தவறுகள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள தோல்வி உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. நான் அதைப்பற்றிய நிறைய யோசித்தேன். எனக்கு மிகப்பெரிய கற்றலைக் கொடுத்தது இந்தப் படம்.
கிரண் ராவிடம் நான், ‘இந்தப் படத்தில் நான் பல தளங்களில் தவறுகளை செய்திருக்கிறேன். இந்த தவறுகளையும் ஒரே படத்தில் செய்துள்ளேன் என்பதற்காக கடவுளுக்கு நன்றி’ என்று அப்போது சொல்லியிருந்தேன். படம் சரியாக போகவில்லை என்பது எனக்கு எமோஷனலாக மிகவும் காயப்படுத்தியது. அதிலிருந்து மீள நேரமெடுத்தது” என பேசியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago