கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள படம், ‘ஜோஷ்வா இமை போல காக்க’ . வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் வருண் கதாநாயகனாக நடித்துள்ளார். படம், மார்ச் 1-ம் தேதி வெளியாகிறது. இதில் ராக்கே நாயகியாக நடித்துள்ளார். கிருஷ்ணா, யோகிபாபு, மன்சூர் அலிகான் உட்படபலர் நடித்துள்ளனர்.
இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் வருண் கூறும்போது, “இந்தப் படத்தில் எனக்கு சிறப்பான அனுபவம் கிடைத்தது. என்னை சிறந்த நடிகராக மாற்றிய இயக்குநர் கவுதம் சாருக்கு நன்றி. அவரது ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் கேட்டது ஜாலியான லவ் படம். ஆனால், அவர் கொடுத்தது ஆக்ஷன் படம். யானிக் பென், இதில் ஆக்ஷன்காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார். படம் சீரியஸாகத்தான் இருக்கும். டிடி, கிருஷ்ணா என ஜாலியான நபர்களுடன் நடித்திருக்கிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறும்போது, “என் சகோதரி மகன் தான் வருண். நான் தயாரிக்கும் படங்களில் கவுரவ வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இயக்குநர் கவுதமிடம் அறிமுகப்படுத்தினேன். அவர் ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியிருக்கிறார்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
47 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago