மகனை ஹீரோவாக்கியது ஏன்? - இயக்குநர் முத்தையா விளக்கம்

By செய்திப்பிரிவு

சசிகுமார் நடித்த ‘குட்டிப்புலி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் முத்தையா. அடுத்து, ‘கொம்பன்’, ‘மருது’, ‘விருமன்’ உட்பட பல படங்களை இயக்கினார். இவர், இப்போது தனது மகன் விஜய் முத்தையாவை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். இதில் தர்ஷினி, பிரிகிடா சாகா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பல புதுமுகங்கள் இதில் நடிக்கின்றனர். கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்கிறார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் முத்தையாவிடம் கேட்டபோது, “காதர் பாட்ஷா படத்துக்குப் பிறகு ஒரு ஹீரோ நடிக்கும் படத்தை இயக்க இருந்தேன். அவருக்கு கையில் காயம் ஏற்பட்டிருப்பதால், படப்பிடிப்பு தள்ளிப் போனது. அதற்கிடையில் ஒரு படத்தை முடித்துவிடலாம் என்று என் மகன் விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறேன். பள்ளிப் பருவ காதல் மற்றும் அதன் பின்னணியில் நடக்கும் கதை இது. படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளோம். மதுரை அருகே படப்பிடிப்பு நடந்து வருகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE