செல்வராகவனை இயக்குவேன் என நினைக்கவில்லை: தனுஷ்

By செய்திப்பிரிவு

தனுஷ், நடித்து இயக்கியுள்ள ‘ராயன்’ படம் முடிவடைந்துவிட்டது. அவரின் 50-வது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இதில், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷண், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடித்துள்ளனர். தன்னை அறிமுகப் படுத்திய தனது சகோதரர் செல்வராகவனையும் இதில் இயக்கியுள்ளார் தனுஷ்,

‘ராயன்’ படத்தில் செல்வராகவனின் கதாபாத்திர தோற்றத்தை வெளியிட்டுள்ள தனுஷ், “உங்களை ஒரு நாள் இயக்குவேன் என்று நினைத்ததில்லை, செல்வராகவன் சார்” என்று குறிப்பிட்டுள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள செல்வராகவன், “வாய்ப்புக்கு நன்றி இயக்குநர் சார். இது சிறந்த படமாக மாறும். உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்