சென்னை: ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் மலையாள படம் ‘பிரேமலு’ உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் ‘தண்ணீர் மத்தான் தினங்கள்’, ‘சூப்பர் சரண்யா’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘பிரமேலு’. நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு நடித்துள்ள இப்படத்துக்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். மேத்யூ தாமஸ், ஷ்யாம் புஸ்கரன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். ஃபஹத் பாசில், ஷ்யாம் புஸ்கரன், திலேஷ் போத்தன் ஆகிய மூவரும் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.
காதலர் தினத்தையொட்டி திரையரங்குகளில் வெளியான இப்படம் நகைச்சுவைக் கலந்த காதலால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள ரசிகர்களைத் தாண்டி தமிழ், தெலுங்கு ரசிகர்களிடையேயும் படம் வரவேற்பை பெற்று வருகிறது. பெரிய நட்சத்திரங்களின் பின்புலம் இல்லாமல் கதையை மட்டும் நம்பி வெளியான இப்படம் வசூலில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
» கவனம் ஈர்க்கும் தபு, கரீனா கபூர், கீர்த்தி சனோனின் ‘Crew’ முதல் தோற்றம்!
» “நான் ரெடி” - விஜய் படத்தை இயக்குவது குறித்து கவுதம் வாசுதேவ் மேனன்
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago