மும்பை: பாலிவுட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘Crew’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் மூன்று நடிகைகளின் தோற்றமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தபு, கரீனா கபூர் ஆகியோர் பாலிவுட்டில் தொடர்ந்து தங்களது இருப்பை நிரூபித்து வருகிறனர். கரீனா கபூர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஜானே ஜான்’ படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதேபோல, தபு நடிப்பில் வெளியான ‘குஃபியா’ படமும் பரவலான கவனத்தை ஈர்த்தது. கீர்த்தி சனோனின் நடிப்பில் வெளியான ‘தேரி பாத்தோமே ஏசா உல்ஜா ஜியா’ (Teri Baaton Mein Aisa Uljha Jiya) படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.100 கோடியை வசூலித்தது.
இந்நிலையில், இம்மூவர் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம் ‘Crew’. இப்படத்தை ராஜேஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். படம் வரும் மார்ச் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தற்போது இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹெய்ஸ்ட் - காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் தோற்றத்தில் மூவரும் விமான பணிப்பெண்களுக்கான தோற்றத்தில் காட்சியளிக்கின்றன. கரீனா கபூருக்கான போஸ்டரில், ‘திருடு’, தபு போஸ்டரில் ‘ரிஸ்க் எடு’, கீர்த்தி சனோன் போஸ்டரில் ‘ஏமாற்று’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
» ‘காதலுக்கு மரியாதை’ முதல் ‘வாலி’ வரை: தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் ஆதிக்கம்
» கதாநாயகனாக அறிமுகமாகும் இயக்குநர் முத்தையா மகன்: படப்பிடிப்பு தொடக்கம்
இப்படம் குறித்து கீர்த்தி சனோன் கூறுகையில், “நகைச்சுவையான படமாக உருவாகியுள்ள இப்படம் சிலிர்க்கும் அனுபவத்தைக் கொடுக்கும். சிறப்பாக எழுதப்பட்டிருக்கும் இப்படம் 3 பெண்களின் நட்பை பேசுகிறது. நான் திரையில் கண்டு வியந்த நடிகைகளுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago