கதாநாயகனாக அறிமுகமாகும் இயக்குநர் முத்தையா மகன்: படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: மதுரையைக் கதைக்களமாகக் கொண்ட தனது புதிய படத்தில் தனது மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார் இயக்குநர் முத்தையா. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று மதுரையில் தொடங்கியது.

தமிழில் பிரபல இயக்குநராக வலம் வரும்பவர் முத்தையா. சசிகுமார் நடிப்பில் ‘குட்டிப்புலி’, விஷால் நடித்த ‘மருது’, ‘கார்த்தி நடித்த ‘கொம்பன்’, ‘மருது’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கிராமத்துப் பின்னணி கொண்ட படங்களை இயக்கி வரும் வரும் முத்தையா அடுத்ததாக மதுரையை கதைக்களமாக கொண்ட ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்தில் முத்தையாவின் மகன் விஜய் முத்தையா நாயகனாக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை இந்தப் படத்தில் நடிக்க வைக்க இயக்குநர் முத்தையா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று (22.02.24) இதன் படப்பிடிப்பு மதுரையில் பூஜையுடன் தொடங்கியது. படப்பிடிப்பை ஒரே கட்டமாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றுக்காக மதுரையில் பிரம்மாண்ட அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு, அங்கு ஒருவாரம் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்த படத்தை கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகள் எம்.சுகுமார் மேற்கொள்ள, வெங்கட்ராஜூ படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். கலை இயக்குனராக வீரமணி கணேசன் பணியாற்ற இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்