சென்னை: அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா நடித்துள்ள ‘ஷைத்தான்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடையே ட்ரெய்லர் காட்சிகள் கவனம் பெற்று வருகின்றன.
இந்தப் படத்தை ‘சூப்பர் 30’, ‘கானாபத்’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விகாஸ் பால் இயக்கியுள்ளார். இதில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை அஜய் தேவ்கன் தயாரித்துள்ளார். அமித் த்ரிவேதி இசையமைத்துள்ளார். சூப்பர் நேச்சூரல் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியிடப்பட்டது. இது படத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - தனது மொபைல் போனுக்கு சார்ஜ் ஏற்ற வரும் மாதவன், அந்த வீட்டில் உள்ள பெண்ணை வசியம் செய்து ஆட்டிப்படைப்பதே களம் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. அஜய் தேவ்கன், ஜோதிகாவின் மகள், மாதவன் சொல்படி நடக்கிறார். அவர் முழுமையாக மாதவன் கட்டுப்பாட்டில் இருக்கிறார். இந்தக் கதைக்களத்தில் நடக்கும் காட்சிகளை திகிலுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக்கி படத்தின் மீதான ஆர்வத்தைக் கூட்டுகிறது ட்ரெய்லர்.
மாதவனின் அசால்ட்டான டீலிங் ரசிக்க வைக்கிறது. அஜய் தேவ்கன், ஜோதிகா ஆகியோர் போட்டிப்போட்டு நடிக்கின்றனர். பயம், பதற்றம், அச்சம், திகில் உணர்வுகளை கடத்தும் ட்ரெய்லர் காட்சிகள் படத்தின் மீதான நம்பிக்கையை கூட்டுகின்றன. படம் மார்ச் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லர் வீடியோ:
» சர்ச்சை பேச்சு விவகாரம் | அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு த்ரிஷா நோட்டீஸ்
» ஜோனதன் மேஜர்ஸ் நீக்கம் எதிரொலி: ‘அவெஞ்சர்ஸ்: தி காங் டைனாஸ்டி’ தலைப்பு மாறுகிறது
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago