சிவ.கா, தனுஷ் பட இயக்குநருடன் கைகோத்த லெஜண்ட் சரவணன்!

By செய்திப்பிரிவு

சென்னை: ‘தி லெஜண்ட்’ படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நாயகனாக அறிமுகம் ஆனவர் தொழிலதிபர் அருள் சரவணன். அவரது அடுத்த படத்தை துரை செந்தில்குமார் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘எதிர்நீச்சல்’, ‘காக்கிக் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் தற்போது சூரி நடிப்பில் உருவாகி வரும் ‘கருடன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இதையடுத்து அவர் லெஜண்ட் சரவணனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தின் பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

‘கொடி’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த வெங்கடேஷ் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும், ஜிப்ரான் இசையமைப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘தி லெஜண்ட்’. இந்தப்படத்தில் அருள் சரவணன், விவேக், நாசர், சுமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், தற்போது தனது இரண்டாம் படத்தில் அருள் சரவணன் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்