மும்பை: பிரபல இந்திப் பட இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி. இவர், தாமினி, த லெஜண்ட் ஆஃப் பகத் சிங், காக்கி, ஹல்லா போல் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். தயாரிப்பாளராகவும் இருக்கும் இவர், கடந்த 2015-ம் ஆண்டு, குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அசோக்லால் என்பவரிடம் ரூ.1 கோடி கடனாகப் பெற்றார். அதைத் திருப்பி செலுத்த தலா ரூ.10 லட்சம் என்ற முறையில் 10 காசோலைகளைக் கொடுத்துள்ளார். அவை பணம் இல்லாமல் வங்கியில் இருந்து திரும்பிவிட்டன.
இதையடுத்து, ராஜ்குமாரை தொடர்புகொள்ள அசோக் லால் முயன்றுள்ளார். முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குஜராத் ஜாம்நகர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில், ராஜ்குமார் சந்தோஷிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பளித்த நீதிமன்றம், அசோக் லாலுக்கு ரூ. 2 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் மேல்முறையீடு செய்ய, ராஜ்குமார் சந்தோஷிக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago