சென்னை: கலையரசன், சாண்டி மாஸ்டர், கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ், சோபியா உட்பட பலர் நடிக்கும் படம், ‘ஹாட்ஸ்பாட்'. கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் கேஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் தயாரிக்கின்றனர். சதீஷ் ரகுநாதன்- வான் இசையைமக்கின்றனர். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார்.
திட்டம் இரண்டு, அடியே படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்தி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, "நம் கண்முன் நடக்கும் பல விஷயங்களை நம் சவுகரியங்களுக்காகக் கண்டுகொள்ளாமல் கடந்து போய் கொண்டிருக்கிறோம். அதனால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் படம் இது.
மக்களைச் சுற்றி நடக்கும் அரசியலைப் பற்றிய விஷயம்தான். அது என்ன என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ். இதில் நான்கு வெவ்வேறு கதைகள் இருக்கின்றன. ஒரு கட்டத்தில் அவை ஒன்று சேர்வது போல இதன் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. கலையரசன்- சோபியா, அதித்யா -கவுரி கிஷன், சாண்டி- அம்மு அபிராமி, சுபாஷ் -ஜனனி ஐயர் ஆகியோர் ஒவ்வொரு கதையில் நடித்துள்ளனர். இதுவரை பேசப்படாத விஷயங்களையும் இதில் வெளிப்படையாக, அழுத்தமாகப் பேசியிருக்கிறோம். அது அதிர்ச்சியாகவும் இருக்கலாம். படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அடுத்த மாதம் வெளியாகும்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
28 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago