சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தினேஷ், ஊர்வசி, மாறன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘J.பேபி’ திரைப்படம் வரும் மார்ச் 8ஆம் தேதி வெளியாக உள்ளது.
சுரேஷ் மாரி இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்துள்ள படம் 'J.பேபி'. இந்தப் படத்தை கோல்டன் ரேசியோ ஃபிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இயக்குநர் பா.ரஞ்சித் படங்களை தயாரித்துள்ளார். இதில் ஊர்வசி, மாறன் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அம்மா மற்றும் அவரது இரண்டு மகன்கள் பற்றிய கதை எனவும், சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை கலந்து இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. டோனி பிரிட்டோ இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இப்படத்துக்கு சென்சார் வாரியம் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்படம் வரும் மார்ச் 8ஆம் தேதி பெண்கள் தினத்தையொட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை தமிழகத்தில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago