இந்தி படத்தில் கதாநாயகன்: எமி ஜாக்சன் காதலர் விருப்பம்

By செய்திப்பிரிவு

லண்டன்: நடிகை எமி ஜாக்சன், மதராசபட்டினம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்தார். இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. 2019-ல் எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தைப் பிறந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர். அடுத்து ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை, எமி ஜாக்சன் காதலித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் எமி ஜாக்சன் நடித்துள்ள ‘கிராக்’ என்ற இந்திப் படம் பற்றி அவர் அளித்துள்ள பேட்டியின்போது, எட் வெஸ்ட்விக்கிற்கு இந்தியில் நடிக்கும் ஆசை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “கடந்த முறை அவர் மும்பை வந்தபோது சில இந்திப் படங்களை, குறிப்பாக நான் நடித்த படங்களைப் பார்த்தார். இந்தி படங்கள் நம்ப முடியாததாக இருக்கிறது என்று சொன்னார். இப்போது நான் நடித்துள்ள ‘கிராக்’ படத்தின் டிரெய்லரையும் பார்த்தார். அதன் ஆக்‌ஷன் காட்சிகள் அவருக்குப் பிடித்திருந்தன. இந்தி படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்க அவர் விரும்புகிறார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்