சென்னை: மலையாள நடிகர் ஷேன் நிகாம் தமிழில்அறிமுகமாகும் படம், ‘மெட்ராஸ்காரன்’. இதில் ஐஸ்வர்யா தத்தா, நிஹாரிகா, கலையரசன், கருணாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். எஸ்.ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஸ் தயாரிக்கிறார். சாம் சி. எஸ் இசை அமைக்கிறார். வாலி மோகன்தாஸ் இயக்குகிறார். இதன் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழாவில், ஷேன் நிகாம் பேசும்போது, “சின்ன வயதில் இருந்தே அதிகமாக தமிழ் சினிமா பார்த்துதான் வளர்ந்தேன். கேரளாவில் தமிழ் ஹீரோக்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அதே போல் தான் நானும். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசும்போது, “கதை சொன்ன 5 நிமிடத்தில் இந்தப்படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டார். நடிகர் ஷேன் நிகாமை சந்தித்ததே மறக்க முடியாத அனுபவம். அவர் தமிழில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு நன்றி” என்றார். இயக்குநர்கள் வசந்த் சாய், பொன் ராம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
28 mins ago
சினிமா
54 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago