சென்னை: சசிகுமார் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஃப்ரீடம்’ (Freedom) படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
‘கழுகு’, ‘கழுகு 2’, ‘நான் மிருகமாய் மாற’ ஆகிய படங்களை இயக்கிய சத்ய சிவாவின் இயக்கத்தில் வெளியாக உள்ள அடுத்த படம் ‘ஃப்ரீடம்’ (Freedom). இப்படத்தில் சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பாண்டியன் பரசுராமன் தயாரிக்கிறார். படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். சிநேகன், மோகன் ராஜா பாடல்களை எழுதுகின்றனர். படம் தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்றத்தை ஜி.வி.பிரகாஷ்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முதல் தோற்றம் எப்படி? - இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் போஸ்டர் சசிகுமார் மட்டும் இருக்கிறார். தீ பற்றி எரிகிறது. அதற்கு பின்னணியில் உள்ள படகில் மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருக்கின்றனர். படத்தின் டேக் லைன், ‘ஆகஸ்ட் 14’ என குறிப்பிடப்பட்டுள்ளது. படம் சுதந்திர போராட்டம் பற்றிய கதையா அல்லது வேறு எதேனும் நிகழ்வை மையப்படுத்தியதா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது போஸ்டரில் லிஜோ மோல் - சசிகுமார் முன்னணியில் இருக்க, திரளான மக்கள் கூட்டம் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு போஸ்டர்களும், சோகத்தை மையப்படுத்தியே இருக்கின்றன. முக்கியமான பிரச்சினையை அடிப்படையாக கொண்டு படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago