சென்னை: ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரிக்கும் படம், ‘மங்கை'. இதை குபேந்திரன் காமாட்சி இயக்குகிறார். இதில் ஆனந்தி, துஷி, ராம்ஸ், ஆதித்யாகதிர், கவிதா பாரதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஜே.ஸ்டார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகை ஆனந்தி பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநர் குபேந்திரன் காமாட்சி கதை சொல்லும்போதே இந்தப்படத்தை கண்முன் பார்த்தேன். கதையைகேட்டு முடித்ததும் எனக்கு பயம் வந்தது.அதோடு இந்தப் படத்தை விட்டுவிடக் கூடாது என்றும் முடிவு செய்தேன். இதுஎனக்கு ரொம்ப ஸ்பெஷல் படம். ஒரு நடிகையாக, இமேஜை உடைப்பது போன்ற கேரக்டர் சில படங்களில்தான் அமையும். எனக்கு ‘மங்கை’ மூலம் அது கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்துக்கு பிறகு இயக்குநர் பிரபலமானவராக வருவார். இது டிராவலை மையப்படுத்திய கதைஎன்றாலும் நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள படம். ஒரே ஷெட்யூலில் படத்தை இயக்குநர் முடித்துவிட்டார்” என்றார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago