பழங்குடியினர் பிரச்சினையை பேசும் படம் ‘தயா பாரதி’

By செய்திப்பிரிவு

சென்னை: பள்ளிக்குச் செல்லும்போது யானை தாக்கி கொல்லப்பட்ட ஆதிவாசி ஆசிரியையின் உண்மைக் கதையாக ‘தயா பாரதி’ என்ற படம் மலையாளத்தில் உருவாகிறது. இதில் பாடகர் ஹரிஹரன், நேகா சக்ஸேனா உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

படத்தை இயக்கும் கேஜி விஜயகுமார் கூறும்போது, “பழங்குடியினர் சந்திக்கும் பிரச்சினையை இந்தப்படத்தில் சொல்கிறோம். இதில் பாடகர் ஹரிஹரன் மும்பையைச் சேர்ந்த பாடகராகவும் காட்டுயிர் ஒளிப்பட கலைஞராகவும் நடிக்கிறார். வனப்பகுதிக்கு வரும் அவர் பழங்குடியின மாணவர்களையும் அவர்களின் ஆசிரியர்களையும் சந்திக்கிறார். அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தெரிந்துகொள்ளும் அவர், தனது புகழின் மூலம் அவர்கள் பிரச்சினையை அரசின் கவனத்துக்கு எப்படிக் கொண்டு செல்கிறார் என்பது கதை. அவர் இரண்டு பாடல்களையும் பாடியிருக்கிறார். ‘அய்யப்பனும் கோஷியும்’ பட பாடல் மூலம் பிரபலமான பாடகி நஞ்சம்மா இதில் நடித்துள்ளார்” என்றார்.

இந்தப் படத்தின் மூலம் பாடகர்ஹரிஹரன் நடிகராக அறிமுகமாவதாகச் செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், அவர் ஏற்கெனவே ‘பவர் ஆப் உமன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்