அருண்ராஜா காமராஜ் - விஷ்ணு விஷால் காம்போவில் உருவாகும் புதிய படம்!

By செய்திப்பிரிவு

சென்னை: இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ படங்களின் மூலம் கவனம் இயக்குநராக கவனம் பெற்றவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் அண்மையில் டிஸ்னி ப்ளஸ் ஹாஸ்டார் ஓடிடியில் வெளியானது ‘லேபில்’ வெப் சீரிஸ். இதனைத் தொடர்ந்து அவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விஷ்ணு விஷால். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் மற்ற விவரங்கள் எதையும் படக்குழு வெளியிடவில்லை.

விஷ்ணு விஷாலை பொறுத்தவரை அவர் இயக்குநர் கோகுலுடன் ஒரு படம் நடிக்கிறார். தொடர்ந்து ‘கட்டா குஸ்தி’ இயக்குநர் செல்லா அய்யா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த இரண்டு படங்களையும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. தற்போது அருண் ராஜா காமராஜுடன் இணைந்துள்ளார். 3 படங்களை லைன் அப்பில் வைத்திருக்கும் அவரது நடிப்பில் பிப்ரவரி 9-ம் தேதி ‘லால் சலாம்’ படம் திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

55 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்