‘ஈகோ மோதல்’ - பிஜூமேனன், ஆசிஃப் அலியின் ‘தலவன்’ டீசர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: பிஜூமேனன் - ஆசிஃப் அலி நடித்துள்ள ‘தலவன்’ (Thalavan) மலையாளப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீசர் எப்படி?: அய்யப்பனும் கோஷியும்’ இறுக்கமான ‘ஈகோ’ மோதலில் பிஜூமேனனும் - பிரித்விராஜூம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். அதேபோல ஒரு கதைகளமாக தோன்றுகிறது ‘தலவன்’ படம். இந்த டீசரில் காவல்துறையில் இன்ஸ்பெக்டராக இருக்கும் பிஜூமேனனுக்கும், சப் இன்ஸ்பெக்டரான ஆசிஃப் அலிக்கும் இடையிலான அதிகார மோதலாக இப்படம் இருக்கும் என்பதை டீசர் உணர்த்துகிறது.

இருவரும் விறைப்பாக முறைத்துக்கொண்டிருப்பது, ‘இப்போ இந்த ஸ்டேஷன் இன்சார்ஜ் நான் தான்’ என ஆசிஃப் அலி பேசும் வசனம், ‘உன்னை நான் சார்னு சொல்லி கூப்டனுமா’ என பிஜூமேனனின் வசனம் இருவருக்குமிடையிலான ‘ஈகோ’வை உறுதிசெய்கிறது. இதில் யார் தலைவன் என்பது பிப்ரவரி 23-ம் தேதி தெரிந்துவிடும். படம் அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

தலவன்: பிஜூமேனன் - ஆசிஃப் அலி காம்போவில் உருவாகியுள்ள இப்படத்தை ஜிஸ் ஜாய் இயக்கியுள்ளார். அனுஸ்ரீ, மியா, திலீஷ் போத்தன், கோட்டயம் நசீர், ஷங்கர் ராமகிருஷ்ணன், ஜோஜி கே ஜான், தினேஷ், அனுரூப், நந்தன் உன்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபக் தேவ் இசையமைத்துள்ளார். அருண் நாராயண் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டீசர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

சினிமா

19 mins ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்