‘வித்தைக்காரன்’ படத்தில் 2 வேடங்களில் சதீஷ்

By செய்திப்பிரிவு

சென்னை: காமெடி நடிகர் சதீஷ், சீரியஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம், ‘வித்தைக்காரன்’. லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கி இயக்குகிறார். இதில் சிம்ரன் குப்தா, தாரிணி, ஆனந்தராஜ், மதுசூதனன், சுப்ரமணியம் சிவா உட்பட பலர் நடிக்கின்றனர். ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார். விபிஆர் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு யுவா கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி வெங்கி கூறியதாவது:

பாதுகாப்பு நிறைந்த, விமான நிலையத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் ஒரு பொருளை கொள்ளையடிக்க, ஹீரோ உட்பட 3 குழு திட்டமிடுகிறது. யார் அதை எடுக்கிறார்கள் என்பதுதான் படம். சதீஷ், மேஜிக் செய்பவராக இதில் நடிக்கிறார். காமெடியனாக இதுவரை நடித்த அவர், இதில் சீரியஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார். சீரியஸ் என்றால் பத்துபேரை அடித்து உதைப்பது போன்ற காட்சிகள் இருக்காது. இந்தக் கதைக்கு அவர் பொருத்தமாக இருப்பார். இதில் முதன்முறையாக இரண்டு வேடங்களில் அவர் நடிக்கிறார்.

விமான நிலையம் தொடர்பான காட்சிகளை கோவை விமான நிலையத்திலும் முக்கியமான காட்சிகளை விமான நிலையம் செட் அமைத்தும் எடுத்தோம். சென்னை மெட்ரோ ரயிலிலும் சில காட்சிகளை படமாக்கி இருக்கிறோம். இந்தப் படம் ரசிகர்களுக்கு த்ரில்லிங்கான அனுபவத்தைக் கொடுக்கும். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன. பிப்.23-ம் தேதி வெளியிட இருக்கிறோம்.

இவ்வாறு வெங்கி கூறினார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்