சென்னை: சிம்பு - தேசிங்கு பெரியசாமி படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், பிப்ரவரி 2-ம் தேதி படத்தின் அப்டேட் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது சிம்புவின் ‘பத்து தல’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘இனி தொடர்ந்து படங்களில் நடிப்பேன்’ என சிம்பு தெரிவித்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்த நிலையில், அடுத்ததாக அவர் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி படத்தில் கமிட் ஆனது அவர்களுக்கு கூடுதல் உற்சாகம்.
இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ‘சிம்பு48’ என அழைக்கப்படும் இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது. ஆனால் அதன்பிறகு எந்த அப்டேட்டும் இல்லை. இதனால் படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவின.
இந்நிலையில், தற்போது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிப்ரவரி 2-ம் தேதி படத்தின் ‘ட்விங்கிள்’ வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகுமா அல்லது வீடியோ வெளியிடப்படுமா என்பது தெளிவில்லை. பிப்ரவரி 3-ம் தேதி சிம்புவின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், ரசிகர்களுக்கான ட்ரீட்டாக இது அமைய உள்ளது.
பீரியட் ஆக்ஷன் டிராமாவாக உருவாகும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் காரணமாக காலதாமதம் ஆவதாக கூறப்படுகிறது. ஆக்ஷனில் அதிக கவனம் செலுத்தி உருவாகும் இப்படத்துக்கு பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வருவதாகவும், பிப்ரவரியிலிருந்து படக்குழு தீவிர படப்பிடிப்பில் இறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago