விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ கோடை விடுமுறைக்கு வெளியீடு: கவனம் ஈர்க்கும் போஸ்டர்

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘பிச்சைக்காரன் 2’, ‘கொலை’ படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். ‘ரோமியோ’ (Romeo) என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார். யூடியூப்பில் ‘காதல் டிஸ்டன்ஸிங்’ என்ற தொடரை இயக்கிய இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் படத்தை இயக்குகிறார். பரத் தனசேகர் இசையமைக்கும் படத்தின் படப்பிடிப்பு மலேசியா, பாங்காக், ஹைதராபாத், பெங்களூர், தென்காசி மற்றும் மகாபலிபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகிறது. ரொமான்டிக் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இப்படத்துக்கான போஸ்டரில் விஜய் ஆண்டனி அப்பாவியாக அமர்ந்திருக்க, மனைவி மிருணாளினி மதுவை கோப்பையில் ஊற்றும் வகையிலான போஸ்டர் கவனம் பெற்றுள்ளது. படம் கோடையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்