தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷண் விருது: திரையுலகினர் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: பத்மவிபூஷண் விருது பெற்றுள்ள நடிகர் சிரஞ்சீவிக்கு தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தை சேர்ந்த வைஜெயந்திமாலா, பத்மா சுப்ரமண்யம், விஜயகாந்த், பத்திரப்பன், ஜோஷ்னா சின்னப்பா, ஜோ டி குரூஸ், ஜி.நாச்சியார், சேசம்பட்டி டி.சிவலிங்கம் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ராஜமவுலி: “இந்தியாவின் மிக உயர்ந்த இரண்டாவது விருதை பெற்றுள்ள சிரஞ்சீவியின் சாதனைப் பயணம் பல தலைமுறையினருக்கு உத்வேகமாக அமையும் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரவி தேஜா: “பத்மவிபூஷண் மாஸ்டர் சிரஞ்சீவி. வாழ்த்துகள் அண்ணா. லவ் யூ” எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஜுனியர் என்.டி.ஆர்: “வெங்கையா நாயுடு, சிரஞ்சீவி இருவருக்கும் வாழ்த்துகள். மேலும் பத்ம விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

மேலும்