சென்னை: விஷால் நடித்துள்ள ‘ரத்னம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களுக்குப் பிறகு ஹரி - விஷால் கூட்டணியில் உருவாகும் முன்றாவது படம் ‘ரத்னம்’. இதில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஷாலின் 34-வது படமான இதை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை போன்ற இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்நிலையில், படம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் இரண்டு மொழி போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.
» ப்ளூ ஸ்டார் Review: அரசியல் தூவிய திரை ஆட்டத்தின் ஸ்கோர் எப்படி?
» மானநஷ்ட வழக்கில் நடிகர் பாபி சிம்ஹா பதிலளிக்க ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ்
இயக்குநர் ஹரியை பொறுத்தவரை அவர் இயக்கத்தில் வெளியான ‘சாமி 2’, ‘யானை’ ஆகிய இரண்டு படங்களும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. தற்போது விஷால் காம்போவில் உருவாகியுள்ள இப்படம் அவரை மீட்டெடுக்குமா என்பதை பொறுத்திருந்த பார்க்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago