கொச்சி: ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள ‘ஆவேஷம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வசூல் ரீதியாக மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘ரோமாஞ்சம்’. இதன் இயக்குநர் ஜித்து மாதவன் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘ஆவேஷம்’ இதில் ஃபஹத் ஃபாசில், மன்சூர் அலிகான், ஆஷிஷ் வித்யாத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சுஷின் ஷ்யாம் இசையமைக்கும் இப்படத்தை ஃபஹத் ஃபாசில் அண்ட் ஃப்ரெண்ட்ஸ் மற்றும் அன்வர் ரஷீத் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசர் எப்படி? - ”ரங்கன் சேட்டா எப்படி இவ்வளவு பெரிய ஆளாக மாறினார்?" என்று மூன்று பதின்பருவ இளைஞர்கள் கேட்கும் கேள்வியுடன் டீசர் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து ஃபஹத் ஃபாசில் குறித்து படத்தின் கதாபாத்திரங்கள் காமெடி கலந்த பில்டப்புடன் சொல்லத் தொடங்குவது ரசிக்க வைக்கிறது.
அண்மைக் காலமாக இந்திய சினிமாவில் வரும் வெற்று பில்டப் வசனங்களை பகடி செய்யும்படி வைக்கப்பட்டுள்ள காட்சிகள் குபீர் சிரிப்பை வரவழைக்கின்றன. சமீர் தாஹிரின் ஒளிப்பதிவும், சுஷின் ஷ்யாமின் இசையும் கவனிக்க வைக்கின்றன. இப்படம் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியாகிறது. ‘ஆவேஷம்’ டீசர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago