மும்பை: நடிகர் அக்ஷய் குமார் ‘படே மியான் சோட் மியான்’ பாலிவுட் படப்பிடிப்பில் இருப்பதால், அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இதனால், அவர் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், “ஜெய் ஸ்ரீராம்... உலகம் முழுவதும் உள்ள அனைத்து ராம பக்தர்களுக்கும் இது ஒரு முக்கியமான நாள். நூற்றுக்கணக்கான வருட காத்திருப்புக்குப் பின் ராம் லல்லா அயோத்தியில் உள்ள பிரம்மாண்டமான கோயிலுக்குத் திரும்புகிறார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த புனிதமான நாளில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
நடிகர் டைகர் ஷெராஃப்பும் இப்படத்தில் நடித்து வருகிறார். அக்ஷய் குமார் பகிர்ந்திருக்கும் வீடியோவில் இருக்கும் அவர் பேசுகையில், “ராமரை வரவேற்கும் இந்நேரத்துக்காகவே காத்திருந்தோம்” என தெரிவித்துள்ளார். மேலும், ராமர் கோயில் நிகழ்வில் டைகர் ஷெராஃபின் தந்தை ஜாக்கி ஷெராஃப் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago