ஹைதராபாத்: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. இப்படத்தின் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படம் அண்மையில் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 51வது படத்தை தேசிய விருதுபெற்ற இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார். இதில் நடிகர் நாகர்ஜுனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. முதல்கட்டமாக படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதில் தனுஷ், இயக்குநர் சேகர் கம்முலா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். நாகர்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் விரைவில் படப்பிடிப்பில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.
தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
» “இன்ஜினியரிங் என்ன நம்ம குல தொழிலா?”- ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ ட்ரெய்லர் எப்படி?
» பேய்.. கிரீடம்.. காமெடி - யோகிபாபுவின் ‘தூக்குதுரை’ ட்ரெய்லர் எப்படி?
முக்கிய செய்திகள்
சினிமா
53 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago