சென்னை: பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் இம்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தாமதம் காரணமாக ஏப்ரல் மாதத்துக்கு ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. அதிக பொருட்செலவில் வரலாற்றுப் பின்னணியுடன் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷனும் தயாரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பீரியட் படமான இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.இந்தப் படம் ஜன. 26-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாததால் ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேதி குறிப்பிடப்படவில்லை.
» சூர்யாவின் ‘கங்குவா’ 2-வது போஸ்டர் எப்படி?
» “அது ஆயுர்வேத பீடி” - ‘குண்டூர் காரம்’ பட காட்சிகள் குறித்து மகேஷ்பாபு விளக்கம்
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago