ஹைதராபாத்: பிரபாஸ் நடிக்கும் ‘ராஜாசாப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் பிரபாஸ் பெயரில் ஆங்கிலத்தில் கூடுதலாக ஒரு எஸ் சேர்க்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.
மாருதி தசாரி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படம் ‘தி ராஜாசாப். பீபுள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இந்த படத்துக்கு தமன் இசையமைக்க உள்ளார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
வழக்கமாக ஆங்கிலத்தில் ‘PRABHAS' என்று இடம்பெறும் பிரபாஸின் பெயர் இதில் கூடுதலாக ஒரு ‘எஸ்’ சேர்க்கப்பட்டு ‘PRABHASS' என்று இடம்பெற்றுள்ளது. தொடர் தோல்விகளால் நியூமராலஜி காரணங்களுக்காக தனது பெயரை பிரபாஸ் மாற்றிக் கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுகுறித்து பிரபாஸ் தரப்பில் இருந்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தற்போது பிரபாஸ் நாக் அஸ்வின் இயக்கத்தில் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்குப் பிறகு ‘தி ராஜாசாப்’ படத்தின் பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
» திரை விமர்சனம்: கேப்டன் மில்லர்
» தேவதாஸி: படம் ஓடாததால் பணத்தை திருப்பிக் கொடுத்த என்.எஸ்.கிருஷ்ணன்
முக்கிய செய்திகள்
சினிமா
14 mins ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago