மகேஷ் பாபுவின் ‘குண்டூர் காரம்’ 2 நாட்களில் ரூ.127 கோடி வசூல்!

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: மகேஷ் பாபு நடித்துள்ள ‘குண்டூர் காரம்’ திரைப்படம் 2 நாட்களில் ரூ.127 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஆல வைகுந்தபுரமுலோ’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். இவரது இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ‘குண்டூர் காரம்’ படம் மகர சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12-ம் திரையரங்குகளில் வெளியானது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் எமோஷ்னல் என்டர்டெயின்மென்ட்டாக உருவாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.94 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. மேலும் மகேஷ்பாபு படங்களில் அதிகபட்ச ஓபனிங் கொண்ட படம் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு நாள் வசூலையும் சேர்த்து இதுவரை படம் ரூ.127 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்