சென்னை: சந்தானம் நடித்துள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சந்தானம் ‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் கைகோத்துள்ளார். இந்தப் படத்தை பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள படத்துக்கு ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
‘விட்னஸ்’ பட இயக்குநர் தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். கவுண்டமணி செந்திலின் புகழ்பெற்ற நகைச்சுவை கதாபாத்திரமான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற பெயரை தலைப்பிட்டிருப்பதன் மூலம் படம் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது என்பது தெரிகிறது. படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - ‘நேர்ல பாக்கல’ என்ற ஒற்றை வார்த்தையை வைத்து செய்யும் வார்த்தை வித்தை தொடக்கத்தில் படம் நகைச்சுவைக்கான கியாரன்டி கொடுப்பதை உறுதி செய்கிறது. ‘சாமியே இல்லன்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமி தானே நீ’ என்ற வசனம் கவனிக்க வைக்கிறது.
அடுத்தடுத்த காட்சிகளில் புன்முறுவலுக்கான முயற்சிகள் நடக்க, மேகா ஆகாஷ் - சந்தானம் காதலும் வந்து செல்கிறது . ‘இவன் சரியான பைத்தியம் இல்ல; சரியாகாத பைத்தியம்’ போன்ற வசனத்துடன் ட்ரெய்லர் முடிகிறது. படம் பிப்ரவரி 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.ட்ரெய்லர் வீடியோ:
» அயலான் Review: நேர்த்தியான கிராபிக்ஸ் உடன் ‘நிறைவு’ தந்ததா ஏலியன் கதைக்களம்?
» ‘அயலான்’ ரிலீஸுக்கான இடைக்கால தடையை நீக்கியது சென்னை உயர் நீதிமன்றம்
முக்கிய செய்திகள்
சினிமா
16 mins ago
சினிமா
52 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago