அண்மையில் நடந்த விழா ஒன்றில் நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இடையேயான உரையாடல் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் கலந்துகொண்டனர். அப்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம், “நீங்கள் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து 20, 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. மீண்டும் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து படம் நடிப்பீர்களா" என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நடிகர் ஷாருக் கான், “இப்போது எல்லாம் வெளியில் வந்துவிட்டது. என்னுடன் ஒரு படம் பண்ணுமாறு ஒவ்வொரு முறை உங்களை சந்திக்கும்போதும் கேட்கிறேன். கெஞ்சி கேட்கிறேன். நீங்கள் சரி என்று சொன்னால், இம்முறை 'தைய தைய' பாடலுக்கு விமானத்தின் மேல் ஏறி கூட ஆட தயாராக உள்ளேன்" என்று கூறினார்.
ஷாருக்கானின் இப்பேச்சுக்கு பதிலளித்த இயக்குநர் மணிரத்னம், “நீங்கள் விமானம் வாங்கும்போது நான் செய்து தருகிறேன்” என்றார்.
பதிலுக்கு, “மணி, என் சமீபத்திய படங்களின் வெற்றியை பார்க்கையில், விமானம் வாங்குவது வெகு தொலைவில் இல்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன். விரைவில் வாங்குவேன்” என்று கலகலப்பாக பேசினார். இருவரின் இந்த உரையாடல் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
» நயன்தாராவின் ‘அன்னபூரணி’ படம் நெட்ஃப்ளிக்ஸில் இருந்து நீக்கம்
» ‘கங்குவா’ எனக்கு ஸ்பெஷல்: படப்பிடிப்பை நிறைவு செய்த சூர்யா பகிர்வு
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago