சென்னை: ஜெய் ஆகாஷ், கிகி வாலஸ், காதல் சுகுமார், பிரம்மானந்தம், ராகுல் தேவ் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘மாமரம்’. ஜெய் ஆகாஷ் இயக்கியுள்ளார். பாடல்களுக்கு நந்தா இசை அமைத்துள்ளார். பின்னணி இசையை சதிஷ் குமார் அமைத்திருக்கிறார். பால் பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ கியூப் மூவீஸ் ஆப் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
ஜெய் ஆகாஷ் கூறும்போது, “இந்த படம், மேக்கிங்காக பார்த்தால் சாதனைப் படைப்பு. என் சொந்த காதல் கதைதான் இந்தப் படம். அதில் சினிமாவுக்காக 20 சதவிகிதம் மட்டும் மாற்றியிருக்கிறேன். நிஜத்தில் என் காதலி, பணத்துக்கு ஆசைப்பட்டு என்னைப் பிரிந்திருந்தாலும், நான் அதை இந்தக் கதையில் பாசிட்டிவாக வைத்திருக்கிறேன்.
மாமரம் என்ற தலைப்பை எதற்காக வைத்துள்ளோம் என்பது டிரெய்லர் பார்த்தால் புரியும். 2012-ம் ஆண்டில் தொடங்கிய படம் இது. நாயகனின் 25 வயதிலிருந்து 40 வயது வரையிலான காலகட்டத்தில் நடக்கும் கதை. அதனால் என் இளவயதில் அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன். 10 வருடங்கள் கழித்து நடுத்தர வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago