சென்னை: சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியவர் ஹெச்.வினோத். இவர் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க இருந்தார். அந்தப் படத்தைக் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்திலிருந்து வினோத் விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அவர் போலீஸ் கதை ஒன்றைக் கமலுக்குச் சொன்னதாகவும் அதுபோன்ற கதையில் மீண்டும் நடிக்க அவருக்கு விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் அந்தக் கதையை, தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் அடுத்த பாகமாக உருவாக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலில் இருந்து முழுமையாக அவர் வெளிவரவில்லை என்றாலும், விரைவில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் அடுத்த பாகம் உருவாகும் என்றும் அதற்கானப் பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
25 mins ago
சினிமா
14 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago