‘பாரத் மாதா கி ஜே!’ - நாக சைதன்யா, சாய் பல்லவியின் ‘தண்டல்’ கிளிம்ஸ் வீடியோ எப்படி?

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நாக சைதன்யா - சாய் பல்லவி இணைந்து நடித்து வரும் ‘தண்டல்’ தெலுங்கு படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் புதிய படம் ஒன்றுக்காக இணைந்து நடிக்கின்றனர். சந்தூ மொண்டேடி (Chandoo Mondeti) இயக்கும் இப்படத்துக்கு ‘தண்டல்’ (Thandel) என பெயரிடப்பட்டுள்ளது. இவர் தெலுங்கில் ‘ப்ரேமம்’ படத்தை ரீமேக் செய்திருந்தார்.

இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் உள்ள அன்னபூரணா ஸ்டூடியோவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

வீடியோ எப்படி? - தெலுங்கு சினிமாவில் தேசபக்தியை மையப்படுத்தி வெளியானது ‘சீதாராமம்’. அதைப் பின்பற்றி தற்போது நாகசைதன்யாவின் ‘தண்டல்’ உருவாகியிருப்பதை வீடியோ உணர்த்துகிறது. தேசியக் கொடி, பாகிஸ்தான் ஜெயில், தூக்கலான நாட்டுப்பற்று வசனம் எல்லாவற்றையும் மிக்ஸ் செய்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் நாக சைதன்யா ‘பாரத் மாதா கீ ஜே’ என கத்துகிறார். இந்த வீடியோவில் ஒரே ஆறுதல் இறுதியில் வரும் சாய் பல்லவியின் இன்ட்ரோ. “என் அன்பே நான் விரைவில் வந்துவிடுவேன்” என நாக சைதன்யா வசனம் பின்னணியில் ஒலிக்க சாய் பல்லவி வந்து செல்கிறார். காதல் கடந்த நாட்டுப்பற்று படம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்