நடிகர் விஜய் இப்போது நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். விஜய்யின் 68-வது படமான இதில் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கங்கை அமரன், கார்க்கி, கபிலன் வைரமுத்து, அறிவு பாடல்கள் எழுதுகின்றனர். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ’ (The Greatest Of All Time) என்று தலைப்பு வைத்துள்ளனர். இரண்டு விஜய், விமானப்படை விமானி உடையில் வருவது போல முதல் தோற்ற போஸ்டர், வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது வெளியானதும் சமூக வலைதளங்களில் பலர் இது, ஹாலிவுட்டில் வெளியான ‘ஜெமினி மேன்’ என்ற படத்தின் ரீமேக் போல இருப்பதாகக் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்தப் படத்தில் வில் ஸ்மித் 3 வேடங்களில் நடித்துள்ளார். ரசிகர் ஒருவர், இதை இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு டேக் செய்து கேட்டிருந்தார்.இதை மறுத்துள்ள வெங்கட் பிரபு, ‘ஸாரி ப்ரோ. உங்களிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago