இதுவரை இல்லாத அளவுக்கு, 2023-ம் ஆண்டு 256 தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகி ஆச்சரியப்படுத்தியது. 2024-ம் ஆண்டில் அதை விட அதிகத் திரைப்படங்கள் வெளியாகலாம். இதில் பல மெகா பட்ஜெட் படங்களும் இருக்கின்றன.
தனுஷின் ‘கேப்டன் மில்லர்’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படங்கள் பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றன. இதில் ‘கேப்டன் மில்லர்’ பீரியட் படம். அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ள இதில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உட்பட பலர் நடித்துள்ளனர். ‘அயலான்’ சயின்ஸ் பிக்ஷன் படம். சில வருடங்களாகத் தயாரிப்பிலிருந்த இந்தப் படத்தில் யோகிபாபு, கருணாகரன் உட்பட பலர் நடித்துள்ளனர். ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கியுள்ளார்.
விக்ரமின் ‘தங்கலான்’, இந்த வருடத்தின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக இருக்கிறது. கோலார் தங்க வயல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருக்கிறார். பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். இந்த வருடம், ரஜினியின் 2 படங்கள் வெளியாக இருக்கின்றன. மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ள படம், ‘லால் சலாம்’. விக்ராந்த், விஷ்ணு விஷால் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை லைகா தயாரித்திருக்கிறது. இதையடுத்து ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அமிதாப்பச்சன் உட்பட நிறைந்திருக்கும் நட்சத்திர பட்டாளமும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்புக்குக் காரணமாக இருக்கிறது.
பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படத்தின் முதல்தோற்ற போஸ்டர், எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது. இதில் ரோஷினி பிரகாஷ் நாயகியாக நடித்திருக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இப்போது நடந்து வருகின்றன.ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருக்கிறது. இது இந்த வருடம் வெளியாகிவிடும் என்கிறார்கள். மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ள இதில், காஜல் அகர்வால், சித்தார்த் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.
» ஒரு பெண்ணின் பயணத்தைப் பேசும் ‘மங்கை’
» ‘ஒன்று அசல்... ஒன்று போலி...’ - விஜய்யின் ‘GOAT’ 2-வது போஸ்டர் எப்படி?
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’வை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். திஷா பதானி, பாபி தியோல் என பலர் நடித்துள்ள இந்தப் படத்தை அவர் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துவரும் ‘விடா முயற்சி’ இந்த வருடம் அதிகம் எதிர்பார்க்கும் படங்களின் லிஸ்ட்டில் இருக்கிறது. அதே போல வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்துக்கும் இப்போதே எதிர்பார்ப்பு.வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் ‘விடுதலை பாகம் 2’ இந்த வருடம் வெளியாக இருக்கிறது. முதல் பாகம் வெற்றி பெற்றிருப்பதால் இதற்கும் அதிக வரவேற்பு இருக்கும் என்கிறார்கள்.
கார்த்தி நடிப்பில் இந்த வருடம் இரண்டு படங்கள் வெளிவரலாம். நலன் குமாரசாமி, பிரேம்குமார் இயக்கங்களில் அவர் நடிக்கும் படங்கள் இந்த வருடம் வெளியாக இருக்கிறது. ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ரத்னம்’, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும்படம்,ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’, ஜெயம் ரவியின் சைரன், பிரதர் ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.இந்த மெகா பட்ஜெட் படங்களுக்கு இடையே ‘கூழாங்கல்’ வினோத்குமார் இயக்கத்தில் உருவான ‘கொட்டுக்காளி’ உட்பட சிலசிறு பட்ஜெட் படங்களும் எதிர்பார்ப்பில் இருக்கின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago