சென்னை: 2024-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு முக்கியமான ஆண்டாக பார்க்கப்படுகிறது. உச்சநட்சத்திர நடிகர்களின் படங்கள் வரிசை கட்டியிருப்பதால் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைக்கும் ஆண்டாக 2024 இருக்கும் என சினிமா வர்த்தகர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையிலிருந்து தொடங்குவோம். தனுஷின், அருண் மாதேஸ்வரன் காம்போவில் உருவாகியுள்ள, ‘கேப்டன் மில்லர்’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’, அருண் விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள ‘மிஷன் சாப்டர் 1’, விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் நடித்துள்ள ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக உள்ளன.
இதனிடையே சுந்தர்.சி.யின் ‘அரண்மனை 4’ படமும் வெளியாகிறது. ஜனவரி 26-ல் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேதியில் மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தவிர, சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’, கமலின் ‘இந்தியன் 2’, அஜித்தின் ‘விடாமுயற்சி’, ரஜினியின் ‘வேட்டையன்’, சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே21’ ஆகிய படங்கள் ஏப்ரல் - மே மாதங்களில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ஜூன், ஜூலையில் வெளியாக வாய்ப்புள்ளது.
» பிரபாஸின் ‘சலார்’ 10 நாட்களில் ரூ.625 கோடி வசூல்!
» ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்
தனுஷின் ‘டி50’, நலன்குமாரசாமி இயக்கும் ‘கார்த்தி26’, விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’, சூரியின் ‘விடுதலை பாகம் 2’ என நட்சத்திர நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து இந்த வருடத்தில் வெளியாக உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்ஐசி’ இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரலாம் எனத் தெரிகிறது.
கடந்த 2023-ம் ஆண்டை எடுத்துக்கொண்டால், தமிழ் சினிமா வர்த்தகத்துக்கு உற்சாகமான ஆண்டாக மாறியிருக்கிறது. வாசிக்க > 2023-ல் தமிழ் சினிமா மொத்த வருமானம் ரூ.3,500 கோடி! - முந்தைய ஆண்டை விட அதிகம்
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago