சென்னை: ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு ஃபஹத் பாசில், வடிவேலு இணைந்து நடிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமாக உருவாகும் இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்குகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘ஆறு மனமே’ படத்தை இயக்கியிருந்தார். 2014-ம் ஆண்டு திலீப் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘வில்லாலி வீரன்’ படத்தை இயக்கியிருந்தார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு வடிவேலுவும், ஃபஹத் பாசிலும் இணைந்து நடிக்க உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்துக்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
» ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்
» 2023-ல் தமிழ் சினிமா மொத்த வருமானம் ரூ.3,500 கோடி! - முந்தைய ஆண்டை விட அதிகம்
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago