நடிகர் சுரேஷ்கோபி முன் ஜாமீன் கேட்டு மனு

By செய்திப்பிரிவு

பிரபல மலையாள முன்னணி நடிகர் சுரேஷ்கோபி. இவர் தமிழில், அஜித்தின் தீனா, ஷங்கர் இயக்கிய ஐ, விஜய் ஆண்டனி நடித்த ‘தமிழரசன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். பாஜக பிரமுகரான இவர், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் கோழிகோட்டில் பேட்டியளித்தார். அப்போது, கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரின் தோளில் கை வைத்தார். அவர் கையைத் தட்டிவிட்டபோதும் சுரேஷ்கோபி மீண்டும் அவர் தோளைத் தொட்டு பேசினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பானது. பின்னர் இதற்காக அவர் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் அந்தச் செய்தியாளர், கோழிக்கோடு நடக்காவு போலீஸ் நிலையத்தில் சுரேஷ்கோபி மீது புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் போலீஸார் தன்னை கைது செய்யாமல் இருக்க, கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு, சுரேஷ்கோபி மனு தாக்கல் செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்