சென்னை: ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் ‘சென்னையில் சங்கீத உற்சவம் திருவிழா நிகழ்ச்சி-சீசன் 2’, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்சன் சென்டரில் இன்று முதல் ஜன.1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்று மாலை கேரளா ஷரத், 28-ம் தேதி மாலை திருச்சூர் சகோதரர்கள், 29-ல் ராஜேஷ் வைத்யா, 30-ம் தேதி விக்னேஷ் ஈஸ்வர், திருவாரூர் பக்தவச்சலம் , 31-ம் தேதி பாடகி மஹதி, ஜன. 1-ல் ராகுல் தேஷ் பாண்டேமற்றும் சந்தீப் நாராயணன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் இசைக் கலைஞர்கள் மஹதி, ராஜேஷ் வைத்யா, மாண்டலின் ராஜேஷ், ஜீ கே மீடியா நிர்வாக இயக்குநர், விநாயகா கேட்டரிங் நிர்வாக இயக்குநர் கலந்துகொண்டனர்.
இந்த இசை நிகழ்ச்சி பற்றி மஹதி கூறும்போது, “பொதுவாகச் சென்னையில் சங்கீத கச்சேரிகள், மயிலாப்பூர், தி. நகர் போன்ற இடங்களில் மட்டுமே நடக்கின்றன. பரந்து விரிந்துவிட்ட சென்னை நகரின் பல பக்கங்களில் இருக்கும், மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், ‘சென்னையில் சங்கீத உற்சவம்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழா 6 நாட்கள், நடைபெறவுள்ளது. நான் 31-ம் தேதி இசை நிகழ்வில் கலந்துகொள்கிறேன்” என்றார்.மாண்டலின் ராஜேஷ், ராஜேஷ் வைத்யா, மஹதி.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago