கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரித்துள்ள படம், ‘நேற்று இந்த நேரம்’. சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹரிதா, மோனிகா ரமேஷ் நாயகிகளாக நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனத்தை நித்தின் ஆதித்யா, சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர்.
கெவின் என் இசையமைத்துள்ள இந்தப்படத்துக்கு விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களை, ஜி.வி.பிரகாஷ், அறிவு, ஆதித்யா ஆர்.கே., ரவிஜி பாடியுள்ளனர். படம் பற்றி சாய் ரோஷன் கே.ஆர் கூறும்போது “இது மர்டர் மிஸ்டரிதிரைப்படம். சென்னையில் இருந்து ஊட்டிக்கு ஏழு நண்பர்கள் செல்கிறார்கள். அங்கு ஒருவர் திடீரென காணாமல் போகிறார்.
அங்கு ஏற்கெனவே சீரியல் கில்லர் ஒருவரும் இருக்கிறார். காணாமல்போனவர் என்ன ஆனார்? அதற்குக் காரணமானவர்கள் யார் என்பதுதான் கதை. ஏழு கேரக்டருக்குமே ‘நெகடிவ் ஷேட்’ இருக்கும் என்பதால், ஒவ்வொருவர் மீதும் சந்தேகம் வருவது போலஇதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதை. சென்னை மற்றும் ஊட்டியில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். இதன் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜனவரி 5-ம் தேதி படம் வெளியாக இருக்கிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
53 mins ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago