பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ். இவர் தமிழில், ‘முதல் கனவே’, ‘சிங்கம்புலி’, ‘கந்தர்வன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நடித்து வரும் அவர், இப்போது ‘ரேச்சல்’ என்ற படத்தில் மாட்டிறைச்சி வெட்டுபவராக நடித்துள்ளார். ஆனந்தினி பாலா இயக்கும் இதில் கலாபவன் சஜோன், பாபுராஜ், ஜாஃபர் இடுக்கி, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர். ஸ்வரூப் பிலிப் ஒளிப்பதிவு செய்துள்ளார். மலையாளத்தில் உருவாகும் இந்தப் படம் பான் இந்தியா முறையில், இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு இப்போது முடிந்துள்ளது.
இதுபற்றி தெரிவித்துள்ள ஹனி ரோஸ், “இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட கடந்த 47 நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாத அத்தியாயமாக மாறியிருக்கிறது. இந்த பான் இந்தியா படத்தில் நடித்தது, தனித்துவமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. கதாநாயகியாக 18 வருடங்கள் நடித்துவிட்டேன். ஆனால், ஆனந்தினி பாலா இயக்கத்தில் நடித்தது, பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி கவனிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago