சென்னை சர்வதேச திரைப்பட விழா | சிறந்த தமிழ்ப் படம் 'அயோத்தி', வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது

By செய்திப்பிரிவு

சென்னை: 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா வியாழக்கிழமை (டிச. 21) நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் திரைப்படமாக அயோத்தி தேர்வு செய்யப்பட்டது. மாமன்னன் படத்துக்காக சிறந்த நடிகர் விருதை வடிவேலு பெற்றார்.

போட்டி பிரிவில் அநீதி, அயோத்தி, மாமன்னன், போர் தொழில், ராவணகோட்டம், செம்பி, விடுதலை உட்பட 12 தமிழ் படங்களும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் சிறந்த படமாக தேர்வான அயோத்தி பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக தேர்வான உடன்பால் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.50,000 வழங்கப்பட்டது. விடுதலை படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது.

மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. அயோத்தி படத்துக்காக ப்ரீத்தி அஸ்ரானிக்கு சிறந்த நடிகை விருதும், போர்தொழில் பட ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி சிறந்த ஒளிப்பதிவாளராகவும், போர்தொழில் பட எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் சிறந்த எடிட்டராகவும், மாமன்னன் படத்தில் பணியாற்றிய சுரேன் சிறந்த ஒலிப்பதிவாளராகவும், சிறந்த குறும்படமாக பகவத் இயக்கிய லாஸ்ட் ஹார்ட் தேர்வு செய்யப்பட்டது. உலக சினிமா பிரிவிலும் விருதுகள் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்