பிரபல ஹாலிவுட் நடிகர் ஜோனதன் மேஜர்ஸ். இவர், ‘த ஹார்டர் தே ஃபால்’, ‘டிவோஷன்’, மார்வெல் படமான ‘ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவான்டுமேனியா’, ‘கிரீட் 3’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிரிட்டிஷ் நடன இயக்குநர் கிரேஸ் ஜப்பாரியைக் காதலித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, ஜோனதன், அவரை கழுத்தை நெரித்து தாக்கியுள்ளார். இதில், அவர் கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கழுத்து, காது பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும் கிரேஸ் போலீஸில் புகார் அளித்தார்.
போலீஸார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஜோனதனுக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, மார்வெல் நிறுவனத்தின் அடுத்த படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். மார்வெல் படங்களின் காங் தி கான்கரர் என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் இவர் நடித்துவந்தார்
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago