சூப்பர் ஸ்டார் பட்டத்தில் என்ன இருக்கிறது? - பார்வதி கேள்வி

By செய்திப்பிரிவு

‘பூ’ படம் மூலம் தமிழில் அறிமுகமான பார்வதி, மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘தங்கலான்’ அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில், “சூப்பர் ஸ்டார் என சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது? அது நேர விரயம். அதனால் யாருக்கு என்ன லாபம்? சூப்பர் ஸ்டார் என்றால் என்ன என்று புரியவில்லை. அந்தப் பட்டம் இமேஜ் கொடுக்கிறதா என்றும் எனக்குத் தெரியவில்லை. என்னை, ஒரு சூப்பர் ஆக்டர் எனக் கூறினால் மகிழ்ச்சியடைவேன். மலையாளத்தில், ஃபகத் ஃபாசில், ஆசிப் அலி, ரீமா கல்லிங்கல் ஆகியோரை சூப்பர் ஆக்டர் எனக் கூறலாம்” என்று தெரிவித்துள்ளார்.

பார்வதியின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

18 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்