Empty Nets (Leere Netze)| Dir:Behrooz Karamizade | Germany, Iran | 2023 | 101 | WC-NC | Santham | 11.45 AM - ஈரானில் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு இளைஞர்களுக்கு திருப்தியான நல்ல வாழ்க்கை என்பது கேள்விக்குறிதான். தங்களுக்குப் பிடித்த ஒரு திருமண வாழ்க்கையைக்கூட அவர்களால் தீர்மானித்துவிடமுடியாது. காஸ்பியன் கடலின் கரையோரத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த வாழும் அமீர் மற்றும் நர்கேஸ் காதலிக்கிறார்கள். இன்றைய ஈரானில், வர்க்க பேதம் உள்ள குடும்பம் அவர்களுடையது, இதனால் அமீரும், நர்கேஸும் தங்கள் காதலை மறைத்து ரகசியமாக சந்திப்புகளில் பேசிக்கொள்கிறார்கள்.
நர்கேஸ் குடும்பம் மிகவும் வசதியான குடும்பம். நர்கேஸை வீட்டைச் சேர்ந்தவர்கள் திருமணத்திற்காக கேட்கும் தொகையை அமீர் வரதட்சணையாக தர வேண்டும். இதற்காக காதலியை பிரியும் நிலை ஏற்படுமோ என அவன் என்று அஞ்சுகிறான். போதுமான பணம் சம்பாதிக்க, மீன்பிடித் தொழிலில் ஈடுபடத் தொடங்குகிறான். அதற்குள் நர்கேஸுக்கு பொருத்தமான வரன் ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கும் செய்தியும் கிடைக்கிறது. சீக்கிரம் வரதட்சணையோடு அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறான் அமீர். அழிந்துவரும் இனங்களான ஸ்டர்ஜன் மீன்களை சட்டவிரோதமாக பிடிக்கும் ஒரு குழுவினருடன் இணைந்து அவர் தனது மீன்பிடி தொழிலில் ஈடுபடுகிறான். ( அசிபென்செரிடே குடும்பத்தைச் சேர்ந்த 28 வகை மீன்களுக்கு ஸ்டர்ஜன் என்பது பொதுவான பெயர்). வலையில் மீன்கள் விழத்தான் செய்கின்றன... ஆனால் அதற்காக அமீர் கொடுக்கும் விலை அபாயகரமானதாக மாறுகிறது.
முழு திரைப்படமும் காஸ்பியன் கடற்கரையில், வடக்கில் உள்ள இரண்டு நகரங்களான ராஷ்ட் மற்றும் பந்தர்-இ அஞ்சலி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. அங்கு தொழில்புரியும் மீனவர்களின் அன்றாட வேலைகளுடன் நாயகன் மற்றும் அவரது குழுவினர் மீன்பிடிக்கும் காட்சிகளும் உண்மையான, எப்போதும் இயங்கும் மீன்பிடி தளங்களிலேயே படமாக்கப்பட்டன.
That Afternoon (Die Middag) | Dir: Nafiss Nia | Netherlands | 2023 | WC-NC | 75' | Serene | 9.40 AM - ஒரு பிற்பகல் பொழுது ரோயா மற்றும் நாசிமின் ஆகிய இருவரின் வாழ்க்கையும் ஒன்றையொன்று குறுக்கிடுகிறது. ரோயா ஈரானில் இருந்து நெதர்லாந்துக்கு புகலிடம் தேடி வந்த அகதி. அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முடித்துவிட்டு, ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் ரோயாவுக்கு மீண்டும் ஈரான் செல்ல விருப்பமில்லை. அகதிகளுக்கு உதவும் நாசிம் என்பவரின் முகவரி அவளது சட்டைப் பாக்கெட்டில் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு அவன் வீடு தேடி வருகிறாள். நிராகரிக்கப்பட்ட அகதிகளுக்கு உதவி செய்யும் நாசிமுடன் இருக்கமுடியும் அவள் நம்புகிறாள். ஆனால் நாசிம் கதவு திறக்கவில்லை. கதவு மூடியே கிடக்கிறது. ஆனால் உள்ளே அவள் தேடி வந்த நபர் இருக்கிறார்.
இரண்டு பேர் மற்றும் ஒரு மூடிய கதவு இதுதான் திரைப்படம். கதவுக்கு அந்தப் பக்கம் ஒரு குரல் தனது வாழ்க்கையின் வலிகளை சொல்லி தயவு கேட்கிறது. கதவுக்கு இந்தப் பக்கம் தனக்கு இருக்கும் சங்கடங்களை சொல்லி ஒரு குரல் தயக்கம் காட்டுகிறது. இரண்டு வெவ்வேறு புள்ளிகளும் சந்தித்தனவா? ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாமல் விசாரிப்புகள் விளக்கங்கள் என பேச்சுகள் கதவுகளுக்கு இருபக்கமும் இருந்து ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.
ஒரு பரிசோதனை முயற்சியாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தை நாஃபிஸ் நியா என்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் கவிதாயினி இயக்கியிருக்கிறார். 15 வயதிலிருந்தே திரைப்படத்தின்மீது திராக் காதல் கொண்டு திரைப்படக் கல்லூரியில் திரைப்படத்தை முறையாகக் கற்றுக்கொண்டு திரைத்துறைக்கு வந்து சாதனைகள் செய்துவரும் பன்முகக்கலைஞர் அவர்.
Angry Annie | Dir: Blandine Lenoir | France | French Films | 2022 | 119 | Seasons |9.30 AM - பெண்களின் பாலியல் சுயநிர்ணய உரிமை என்று வரும்போது, அது பாதுகாப்பான கருக்கலைப்புக்கான அடிப்படை உரிமையையும் பற்றியது. பல இடங்களில் இது தொடர்பான பார்வை பின்னோக்கித்தான் இருக்கிறது. பெண்ணிய சிந்தனைகளுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்படுகின்றன, கட்டுப்பாடுகள் விரிவுபடுத்தப்படுகின்றன, குழந்தை பிறக்கும் வயதினரின் ஒப்புதல் மறுக்கப்படுகிறது. கருக்கலைப்பு சட்டம் 1984 இல் மட்டுமே நடைமுறைக்கு வரும்வரையிலும் நெதர்லாந்திலும் இதுதான் நிலை.
70களின் பிரான்சில் கருக்கலைப்பு மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்தில் பெண் ஒற்றுமை பற்றி இத்திரைப்படம் பேசுகிறது. 1974ல் பிரான்சில் உள்ள ஒரு கிராமப்புற கிராமம். அன்னி என்ற பெண்மணி தனது குடும்பத்தின் மீது மிகவும் அன்புகொண்ட ஒரு தொழிற்சாலை ஊழியர். இரண்டு டீனேஜ் குழந்தைகளுடன் பணிபுரியும் தாயான அன்னி தான் கர்ப்பமானதை உணர்கிறார். ஆனால் இரு குழந்தைகளுக்குப் பிறகு அவர் குழந்தை வேண்டாம் என நினைக்கிறார். இதற்கு அரசாங்கத் தடை இருப்பதையும் அறிகிறார். கருக்கலைப்பு மற்றும் கருத்தடை விடுதலை இயக்கத்தை (MLAC)சந்தித்து அவர்களின் ஆதரவை நாடுகிறார்.
1970 களில் பிரான்சில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்பட்டபோது, காலவரையற்ற எதிர்காலத்தில் அரசாங்கம் மீண்டும் சட்டத்தை மாற்றினால் என்ன நடக்கும் அன்னி ஒரு கட்டத்தில் கேட்கிறார். இத்திரைப்படம் குறித்த விமர்சனங்களில் எங்கும் நிறைந்த இன்றைய பாலியல் சுதந்திரத்தின் சூழலில் 70களின் பிரச்சினையை இன்று எழுப்புவதற்கான தேவை என்னவந்தது என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால் இத்திரைப்படம் பெண்கள் தங்கள் சொந்த உடலைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும், அதை சட்டப்பூர்வமாக்குவதை பெண்களின் ஆதரிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துவதோடு இத்திரைப்படம் இப்பிரச்சினையில் பெண்களின் ஒருங்கிணைந்த ஆதரவை கோரிநிற்கிறது. அனைவருக்கும் - வயது, தொழில், இனம், பாலினம், பாலின அடையாளம் அல்லது திருமண நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் - பாதுகாப்பான, தீர்ப்பு இல்லாத கருக்கலைப்புக்கான அணுகல் இருக்க வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுக்கிறது.
கருக்கலைப்பு சுதந்திரத்திற்கான இயக்கம் (MLAC) தன்னார்வலர்களாக தோன்றும் ஹெலன் (ஜிடா ஹான்ரோட்) மற்றும் மோனிக் (ரோஸ்மேரி ஸ்டாண்ட்லி) கர்ப்பிணி போராளியாக வரும் அன்னி (லாரே கலமி) ஆகியோரின் உணர்ச்சிபூர்வ நடிப்பு இப்படத்தின் அடிநாதமாக விளங்குகிறது. இது புரட்சிகர புதிய சிந்தனை ஒன்றாதலால் திரையிடப்படும் சர்வதேச திரைப்பட விழாக்களில் எல்லாம் இத்திரைப்படம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
Tibean Hearts | Dir: DodgerKarlcha | USA, Tibet | WC-C | 2023 | 70' |Serene |1.45 AM - உலகின் மிக உயரமான அழகான இடம் என போற்றப்படும் திபெத் பீட பூமியிலிருந்து உருவாக்கப்பட்ட படம் இது. மலைவாழ் மக்களின் இயற்கையோடு இயைந்த பாரம்பரிய வாழ்க்கை அழகைக் காட்டவும் ஒரு கலாச்சார திட்டமாக தொடக்கப்பட்ட படம் இது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட 'திபெத்தன் ஹார்ட்ஸ்' ஆங்கில காதல் காவியமான ரோமியோ ஜூலியட் கதையைப் போலவே காதல் சம்பவங்கள் நிறைந்தது.
செம்மறி ஆடு மேய்க்கும் குடும்பங்களுக்கு இடையே ஏற்படும் போட்டிகளுக்கு இடையில் அவர்களின் இளம்வாரிசுகள் காதலில் விழுகின்றன. ஊரை விட்டு வெளியேறிய தனது காதலன் திரும்பி வருவதற்காக 70 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த 91 வயது மூதாட்டி இறந்து ஒரு மாதம் கழித்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இயக்குநர் டோன்ஜர் கர்ல்ச்சா இப்படத்தை தொடங்கியதிலிருந்து பல்வேறு தடைகள் உருவாகின. முதலில் இப்படத்தை தயாரிக்கத் தொடங்கிய சில வாரங்களிலேயே உலகமெங்கும் கரோனா பரவல். கரோனாவின் அனைத்து அலைகளும் கிட்டத்தட்ட முடிந்த பிறகு இப்படம் மீண்டும் தொடங்கப்பட்ட பிறகு படத்தை தயாரித்த ஸ்பெய்நாட்டு படத் தயாரிப்பு நிறுவனம் விலகியது. நல்லவேளையாக ஹாலிவுட்டின் தி மேயா திரைப்படக் குழு தயாரிக்க முன்வந்தது.
]ஹாலிவுட் திரைப்பட தொழில்நுட்ப வல்லுநர்கள், வீடியோ தகவல்தொடர்புகள் மூலம், உள்ளூர் குழுவை வழிநடத்தி திபெத்தில் 21 நாட்கள் படப்பிடிப்பை முடித்தது. படக்குழு உறுப்பினர்கள் அனைவரும் திபெத்திய பூர்வீகவாசிகள். பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் படத்தின் படப்பிடிப்புக்காக கிராமத்திற்குச் சென்றனர். எனவே, ஒவ்வொரு காட்சியும் உண்மையிலேயே அழகான திபெத்திய பீடபூமியிலிருந்து உருவாக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago