லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் மூலம் பிரபலமான நடிகர் ஆண்ட்ரே ப்ராவர் காலமானார். அவருக்கு வயது 62.
2013ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி பெரும் ரசிகர் கூட்டத்தை ஈர்த்த நகைச்சுவை தொடர் ‘ப்ரூக்லீன் 99’. இதில் கேப்டன் ரேமண்ட் ஹோல்ட் என்ற போலீஸ் உயரதிகாரி கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆண்ட்ரே ப்ராவர். கண்டிப்பான அதே சமயம் நகைச்சுவை கலந்து அந்த கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது.
1998ஆம் ஆண்டு ’ஹோமிசைட்: லைஃப் ஆன் ஸ்ட்ரீட்’ என்ற தொடருக்காக சிறந்த நடிகருக்கான எம்மி விருதை ஆண்ட்ரே ப்ராவர் வென்றார். அதே போல, 2006ஆம் ஆண்டு வெளியான ‘தீஃப்’ தொடருக்காவும் சிறந்த நடிகருக்கான எம்மி விருது வென்றார். வெப் தொடர்கள் தவிர்த்து, ‘சிட்டி ஆஃப் ஏஞ்சல்ஸ்’, ‘ஃப்ரீக்வென்ஸி’, ‘பொஸீடன்’, ‘ப்ரைமல் ஃபியர்’, ‘தி மிஸ்ட்’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த ஆண்ட்ரே ப்ராவர் கடந்த திங்கள்கிழமை (டிச 11) அன்று காலமானார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆண்ட்ரேவுக்கு ஏமி ப்ராப்சன் என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
25 mins ago
சினிமா
44 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago